’தாக்குதலுடன் ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இல்லை’

குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன், ஐ.எஸ் அமைப்புக்கு ​தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லையென, குற்றப்புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், இன்று சாட்சியம் வழங்கும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.