திருநங்கைகளுக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்

குறித்த அறிக்கையில் ” பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கு எதிரான இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக அவர்கள் நாளாந்தம் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக அண்மையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 திருநங்கைகள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இம் மாதம் 1 ஆம் திகதி திருநங்கைகள் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதிகாரிகள் இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.