துருவங்கள் இணைந்தன: துணை முதல்வராகிறார் ஓபிஎஸ்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிரிந்த இரு அணியினர் இன்று (21) ஒன்று சேர்ந்தனர். தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தமது இணைவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டனர். இதனடிப்படையில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கே.பாண்டியராஜனும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துறை அமைச்சு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.