தூபி அமைக்கும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புரைக்கமைய, பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி, நேற்று (13) முன்னெடுக்கப்பட்டன.