தொண்டைமானாறு கடல்நீரேரி வான் கதவுகள் திறப்பு

குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, தொண்டைமானாறு கடல்நீரேரி வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டன. அச்சுவேலி – இடைக்காட்டு பகுதியூடாக தொண்டைமானாறு வீதியில் வெள்ளம் பாயலாம் எனும் அபாயத்தால் குறித்த வான்கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. வான் கதவை யாழ். மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சர்வ ராஜா உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர். அத்துடன், தொண்டைமானாறு கடற்பகுதியில் வெள்ளம் பாய்ந்து ஓடுவதற்கான முனை பிரதேசம் தொண்டைமானாறு அக்கறை பிரதேச மக்களால் கால்வாயாக வெட்டி விடப்பட்டது.