தேசியக் கொடி

வழமைபோல் அன்றும் அவனது வீட்டு சேவல் கூவியது. நிதானமாக எழுந்தவன் என்றும் இல்லாதவாறு முக மலர்ச்சியுடன் தன் காலைக்கடன்களை முடிக்கிறான்.ஒரு கையில் தேநீர் குவளை. மறு கையில் சக்கரை துண்டு. சிறிய துண்டு சக்கரையை கடித்துக்கொண்டே நேற்று தன் நண்பனுடன் கதைத்ததை நினைவுக்கு கொண்டு வருகிறான்.