தேவையில்லாமல் தொட்டதாக இரண்டாவது பெண்ணும் குற்றச்சாட்டு

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன், தேவையற்ற விதத்தில் தொட்டதாக அமி லப்போஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் அடுத்தாண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடுவது குறித்து ஜோ பைடன் ஆராந்ய்து வருகின்ற நிலையிலேயே, பத்தாண்டுகளுக்கு முன்பு தனது முகத்தை இரண்டு கைகளாலும் தொட்டதாகவும், மூக்கை அழுத்தியதாகவும் அமி லப்போஸ் தெரிவித்துள்ளார்.