தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் ஆவானெனவும் கூறினார்.