மக்களது ஜனநாயக உரிமைகளின் மீதான பாசிசக் கொடுந்தாக்குதலை முறியடிக்க…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி—மாலெ (லிபரேஷன்), தனது 50வது ஆண்டு நிறைவையும், கட்சியின் நிறுவனரான சாரு மஜூம்தார் பிறந்த நூற்றாண்டையும் அண்மையில் அனுஷ்டித்தது. இது தொடர்பாக, ஒரு பெரும் சிறப்பு மாநாட்டை நேதாஜி உள் விளையாட்டரங்கில் கடந்த ஜூலை 30 ஆம் நாள் நடத்தியது. மவ்லாலி யுவ கேந்திரத்தில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு நாட்கள், கட்சித் தொண்டர்களுக்கான பயிற்சி முகாமையும் நடத்தியது.