தோழர் நகுலன்

புழல் முகாமில் வசித்து வந்த தோழர் நகுலன் வயது 57 சுகயீனம் காரணமாக சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(3.4.19) காலமானார். வவுனியா , சாஸ்திரி கூழாங்குளத்தில் 6.7.1962 இல் பிறந்தார் . சின்னத்தம்பி.மணியம் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர் எமது அமைப்பில் இணைந்த பின்னர் தோழர் நகுலன் என பெயர் தாங்கி அனைவராலும் அழைக்கப்பட்டார்.