நடுவானில் குலுங்கிய விமானத்தால் ஒருவர் பலி; 30 பேர் காயம்

211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருந்த விமானம்,  நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். இது விமான விபத்துகளில் மிகவும் அரிதானதாகத் தெரிகிறது.