நாட்டில் 17 மாவட்டங்களில் வரட்சி

நிலவிவரும் கடுமையான வெப்பநிலையின் காரணமாக, கடும் வரட்சியால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரட்சி ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அதன் செயலகங்களுக்கு கீழ், மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக, குறித்த மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார். அத்துடன் பதுளை, மாத்த​ளை, நுவரெலியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தொடரும் வரட்சியின் காரணமாக காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.