நான்காவது தடவையாக வென்ற அசாட்

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், 95.1 சதவீதமான வாக்குகளுடன் நான்காவது தடவையாக வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவை, செய்தியாளர் மாநாடொன்றில் சிரியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஹம்மெளடா சப்பாஹ் நேற்று அறிவித்த நிலையில், 14 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்ற நிலையில், 78 சதவீதமானோர் வாக்களித்ததாகக் கூறியுள்ளார்.