நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்

கிளிநொச்சிக்கு ஓர் அரசியல் வாதி வருவதாக இருந்தால் அவருடைய ஊடக செயலாளர் எம்மை தொடர்பு கொள்வார் இந்த திகதியில் இத்தனை மணிக்கு நாம் வருவோம் என்று இல்லை எனில் சக ஊடகவியாளர் ஒருவருக்காவது தகவல் வழங்கப்படும். இன்று எனக்கு ஓர் அழைப்பு வந்தது ஓர் அமைச்சர் கிணறுகளை சுத்தம் செய்கிறார் என்று நான் குறித்த இடத்துக்கு செல்லும் போது அங்கு அவர் இருக்கவில்லை அருகில் நின்றவர்களை விசாரித்தேன் ஓர் அமைச்சர் வந்து இந்த கிணற்றை துப்பரவு செய்தாரம் எங்கே போயிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள் அமைச்சர் வந்ததாக தெரியவில்லை சிலர் வந்து நீரை இறைத்து துப்பரவு செய்தார்கள் என்று பின்னர் அத்தகவல் அறிந்து அவர் இருந்த இடத்துக்கு சென்றேன்.அங்கு வந்தவர் சாதாரணமாக நின்று கிணறு இறைத்துக் கொன்றுந்தார் அவர்தான் வாழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் – பாலித தெவரப்பெரும தானே கிணற்றுக்குள் இறங்கி கிணற்றை சுத்தமும் செய்துகொண்டிருந்தார் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பியார்த்தியேக செய்தியாளர்கள் இருப்பார்கள் அங்கு நின்ற ஒருவர் சாதாரண ரப் ஒன்றை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார் அங்கு அவருடன் வந்தவர்களை கேட்டேன் இவருக்கு MSD இல்லையா என்று அதில சிகப்பு சேட்டுடன் ஒருவர் பைப் இழுகிறாரே அவர்தான் MSD ட SI என்றார்கள் வியந்து போனேன் பல அரசியல் வாதிகளைப் பார்த்திருகின்றேன் MSD யை விட்டு விலகாமலும் வெள்ளை சேட்டு கசந்காமலும் சேவை செய்பவர் மத்தியில் தென்னிலங்கையில் இருந்து வந்து விளம்பரம் இல்லாமல் வேலை செய்யும் இவரைக் கண்டு வியந்தேன் விமர்சங்களுக்கு அப்பால்.

(SN Nibojan)

(காணொளியில் காண….)