நினைவுகளிலிருந்து சில …….

தோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தோழர். வன்னி மாவட்டத்தில் பெரிய தம்பனையில் பிறந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் கல்விகற்ற தோழர் நடேசலிங்கம் 28 -11-1981 அன்று ஸ்ரீ லங்கா இராணுவத்தினரது சுற்றி வளைப்பில் கொல்லப்பட்டார். அந்த வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முதலாவது தியாகிகளில் ஒருவர் தோழர் நடேசலிங்கம் அவர்கள் ஆகும்.

தோழர் நடேசலிங்கம் அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரை கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் தோழர் நடேசலிங்கம் மத்திய குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவர். “தாடிக் கிழவனின் பாதையில் தாகம் எடுத்து நடப்பேன்” என கவிதை எழுதிய தோழர் நடேசலிங்கதிற்க்கு அஞ்சலிகள்..