நீண்ட காலத்தின் பின்னர் வெற்றிக்கனியைச் சுவைத்த பைடன்

ஐக்கிய அமெரிக்காவின் செனட்டராக, உப ஜனாதிபதியாக ஐ. அமெரிக்க அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக இருக்கும் ஜோ பைடன், ஜனாதிபதியாகும் முன்னைய இரண்டு தோல்வியில் முடிவடைந்த சந்தர்ப்பங்களைத் தாண்டி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தோற்கடித்து ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.