நீர் ஆய்வு அறிக்கையால் சபையில் குழப்பம்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (04) நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (04) அவைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தால் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை முன்மொழியப்பட்டது. இந்தப் பிரேரணையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழிமொழிந்தார்.

வடக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட நீர் ஆய்வு அறிக்கை தொடர்பில், இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில்வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கிடையில் பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கடும் வாக்கு வாதங்கள் நடைபெற்றன. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன் போது பாலியாற்றிலிருந்து குடாநாட்டுக்கு குடிநீரைக் கொண்டு வருவதற்கான பிரேரணை மீதான விவாதத்தின் போதே, மேற்படி வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.