நைஜீரிய பள்ளியிலிருந்து 300 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு மூன்றாண்டு நிறைவு: நீதி கோரி பேரணிக்கு ஏற்பாடு

2014 ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவில் நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சிபோக்கில் 300 பள்ளி மாணவிகள் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.இச்சம்பவம் நடந்து இன்றுடன் மூன்றாண்டு நிறைவடைந்துவிட்டது.மாணவிகளை மீட்கக் கோரி தலைநகர் அபுஜாவில் சமூக ஆர்வலர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். தலைநகர் அபுஜாவில் போராட்டமும் நடைபெற்றது.

இன்றுவரை அச்சிறுமிகள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் கதி என்னவாயிற்று என்று அவர்களின் பெற்றோர்களும் உலக மக்களும் பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள்.

கடத்தல் சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளில் அச்சிறுமிகளை மீட்க நைஜீரிய அரசு தவறிவிட்டது, அந்நாட்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2009 முதல் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் போகோ ஹராம் 15,000 பேரைப் பலிவாங்கியிருக்கிறது.

மாணவிகளை மீட்பதில் உதவுவதாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தெரிவித்தாலும் இன்றுவரை அவர்கள் மீட்கப்படவில்லை.

இந்நிலையில், மாணவிகளை மீட்கக் கோரி தலைநகர் அபுஜாவில் சமூக ஆர்வலர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

மாணவிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறும் அதிபர் முகமது புஹாரியின் அரசு மேலதிக தகவல்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக தர மறுத்திருக்கிறது.