பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்களா? சல்மான் கான் மீது பக்கத்து வீட்டுக்காரர் குற்றச்சாட்டு

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு வருவதாக பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுக்களை அந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நபர்கள் சுமத்தி இருப்பது பாலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீடு அவரது சகோதரி அர்பிதாவின் பெயரில் உள்ளது. சமீபத்தில் அந்த தோட்டத்தில் தான் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது குறிப்பிடத்தக்கது.