பத்து பேரை பலியெடுத்த கோர விபத்து

மகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணமடைந்துள்ளனர். பதுளை மகியங்கனை பிரதேசத்தில் 17.04.2019 அன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகி சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.