பத்ம விபூஷண் விருது பெற்ற பழங்குடிப் பெண்மணி

இந்த வருஷம் பத்ம விபூஷண் விருது
பெற்றவர்கள் பட்டியலில்
ஒரு பழங்குடிப் பெண்மணி இருந்ததை
கவனித்திருக்கமாட்டீர்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம்
கள்ளாறு எனும் வனப்பகுதியை சேர்ந்தவர்
லஷ்மி குட்டி அம்மா.

இவர் தன் நினைவாற்றல் மூலம்
500 மருந்துகள் தயாரிக்கிறார்.

அதன் மூலம், பல்வேறு நோய்கள், பாம்புக்கடி, பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்ட
மலைவாழ்,பழங்குடி மக்களைக்
காப்பாற்றி வருகிறார்.

தாயிடமிருந்து இத்தகைய மருத்துவ அறிவு
தனக்கு வந்ததாகச் சொல்கிறார் இவர்.

தென் மாநிலங்களில் உள்ள
பல்வேறு கல்வி நிறுவனங்களில்,
இயற்கை மருந்துகள் குறித்து பாடம் நடத்துகிறார்
என்றால் பாருங்களேன்.

1995ஆம் ஆண்டு கேரள அரசிடமிருந்து
‘நாட்டு வைத்ய ரத்னா’ விருது
வழங்கப்பட்ட லஷ்மி குட்டிக்கு
2018ஆம் ஆண்டுக்கான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்ட செய்தியை
கொட்டை எழுத்தில் போட்டிருக்கவேணாமா
ஊடகக்காரர்களே?

(Rathan Chandrasekar)