‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தேசிய விருது இல்லையா? – இயக்குநர்கள் காட்டம்

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து இயக்குநர் பிரம்மா மற்றும் லெனின் பாரதி ஆகியோர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழுக்கு ‘பாரம்’ என்ற படத்துக்கு மட்டுமே விருது கிடைத்தது. மற்ற எந்தவொரு பிரிவிலும் தமிழ்ப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை.