பலத்த பாதுகாப்புடன் ஜோ பைடன் பதவி ஏற்கிறார்

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று(20) பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.