பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு; விவரம் இதோ

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் பயணக் கட்டணம், 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஆகக்கூடிய பஸ் கட்டணம் 1,498 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.