பஸ் சாரதியான பிள்ளையான் எம்.பி

இது குறித்து தெரிவருவதாவது, மாயவட்டை பேரில்லாவெளி எனும் இடத்தில் மாவெட்டுவான் அணைக்கட்டுக்கு அடிக்கால் நாட்டும் நிகழ்வுக்கு, நேற்று முன்தினம் (09) பிள்ளையான் எம்.பி சென்றுள்ளார்.

இதன்போது, அந்த நிகழ்வுக்கு சமுகமளிக்க வந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றி வந்த பஸ்ஸின் சாரதி, வீதி சீரின்மை காரணமாக சுமார் 45 நிமிடங்களாக பஸ்ஸை இடைநடுவில் நிறுத்தி வைத்திருந்ததுடன், அவ்வீதி வழியாக பஸ்ஸை செலுத்த சிரமப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த பிள்ளையான் எம்.பி, அந்தச் சாரதியிடம் விடயத்தை விசாரித்ததுடன், தானே அந்த பஸ்ஸை செலுத்தி, அரச உத்தியோகத்தர்களை, அடிக்கல் நடும் நிகழ்வுக்கு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார்.

பஸ் சாரதியாக செயற்பட்ட எம்.பியின் முன்மாதிரியை மக்கள் பெரிதும் பாராட்டினர்.