பாதை சேவை ஆரம்பம்…

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறைக் கிராமத்திலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கான போக்குவரத்து இழுவைப் பாதை, இன்று (27) சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. திருகோணமலை ரொட்டரிக் கழகத்தின் 11 இலட்சம் ரூபாய் செலவில் இந்தப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.