பாரிய வெடிப்பில் பெய்ரூட் தவிக்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது

அதிகம் வெடிக்கக்கூடிய தன்மையான சரக்கைக் கொண்டிருந்த துறைமுக கொள்கலனில் ஏற்பட்ட குறித்த வெடிப்பைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உரங்கள், குண்டுகளில் பயன்படுத்தப்படும் 2,750 தொன் அமோனியம் நைட்ரேட்டானது பாதுகாப்பு நடைமுறைகள் அல்லது ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என லெபனானின் ஜனாதிபதி மிஷெல் ஆவோன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கவனக்குறைபாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளுக்கு நெருக்கமான உத்தியோகபூர்வ தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும், தாங்கள் சம்பவம் இடம்பெற்ற பகுதியை துப்புரப்படுத்துவதாகவும், இன்னும் உயிரிழந்தோர் இருக்கலாம் எனவும், இல்லை என தான் நம்புவதாகவும் லெபனான் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜோர்ஜ் கெட்டனி தெரிவித்துள்ளார்.

வெடிப்பின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழந்தவர்கள் கடலுக்குள் எறியப்பட்டதுடன், சடலங்களை மீட்க மீட்பு அணிகள் இன்னும் முயலுகின்றனர். பெரும்பாலான கொல்லப்பட்டவர்கள், துறைமுக, சுங்கப் பணியாளர்கள், அப்பகுதியில் பணியாற்றியவர்கள் அல்லது சனநெருக்கடியான அந்நேரத்தில் அப்பகுதியால் பயணித்தவர்கள் ஆவர்.

இந்நிலையில், வெடிப்பை ஏற்படுத்திய தீ எதனால் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்காத நிலையில், கொள்கலனிலிருந்த ஓட்டையொன்றில் இடம்பெற்ற ஒட்டுப் பணியாலேயே தீ ஆரம்பித்ததாக பாதுகாப்புத் தகவல்மூலமொன்றும், ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

குறித்த வெடிப்பானது பெய்ரூட்டிலிருந்து 160 கிலோ மீற்றர் கடல் தாண்டியுள்ள மத்தியதரைக் கடல் தீவான சைப்பிரஸில் உணரப்பட்டுள்ளது.