பிரபஞ்ச புதிர்களுக்கு விடை தேடும் பயணம் ஆரம்பம்

ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.  பிரெஞ்ச் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ரொக்கெட் மூலம்  சனிக்கிழமை அது பூமியிலிருந்து ஏவப்பட்டது. அரை மணிநேரத்தில் அது தனது முதற்கட்டச் சுற்றுப்பாதைக்குச் சென்றுசேர்ந்தது.