பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர்

தமிழ் இனத்தின் தற்போதைய தலைவர் இரா. சம்பந்தன். தேசியத் தலைவனாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்க முடியும் வேறு ஒருவரும் தலைவனாக இருக்க முடியாது என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக் காட்டியுள்ளார். வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தேசியத்தலைவர் என குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் நேற்று முன்தினம் யாழ்.கிறீன் கிறஸ்ட் விருந்தினர் விடுதியில், கிளை குழு கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தின் போது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர் என சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் தமிழ் இனத்தின் தேசிய தலைவனாக தந்தை செல்வநாயகம் அப்போது இருந்தார். தற்போது தமிழரசு கட்சியின் பெரும் தலைவனாகவும் தமிழ் இனத்தின் தலைவனாகவும் இரா.சம்பந்தன் இருக்கின்றார்.