பிரிட்டனில் டிசெம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்

பிரிட்டனில் டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முன்பு தோல்வியில் முடிந்தது.