பிரித்தானியாவில் பிரித்தானியாவின் பிரித்தாளும் கொள்கை

லண்டனில் வசிக்கும் தமிழ் நண்பர் ஒருவருடன் உரையாடிய பொழுது, Brexit விடயத்தில் மக்கள் எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்தியர்கள், இலங்கையர்கள், ஆப்பிரிக்கர்கள் போன்ற முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த குடியேறிகளைக் கவரும் வகையில், போரிஸ் ஜோன்சன் போன்ற அரசியல்வாதிகள் ஒரு கதையை பரப்பினார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியதும், பொதுநலவாய நாடுகளுடன் (முன்னாள் காலனி நாடுகள்) உறவுகள் புதுப்பிக்கப் படும் என்று சொல்லி வந்தனர். முன்னொரு காலத்தில் அந்த நாடுகளில் இருந்து பிரித்தானியா வருவதற்கு விசா தேவைப்படவில்லை.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரானதும், காலனிய குடியேறிகளுக்கு வழங்கிய சலுகைகள் இரத்து செய்யப் பட்டன. உண்மையில், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவு குடியேறிகள் வருவதை பிரித்தானியா நிறுத்த விரும்பியது. அதற்குப் பதிலாக கிழக்கைரோப்பிய வெள்ளையின குடியேறிகளை அனுமதிக்க ஆரம்பித்தது.

பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் தற்போது இரண்டு வகை குடியேறிகளையும் பிரித்து வைத்து வெறுப்புணர்வை உண்டாக்கி விட்டுள்ளனர். கிழக்கைரோப்பிய குடியேறிகளுக்கு எதிராக காலனிய குடியேறிகள். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி நன்றாகவே வேலை செய்துள்ளது. இந்த சூழ்ச்சிக்குப் பின்னணியில் பிரிட்டனின் ஏகாதிபத்தியக் கனவு மறைந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(Tharmalingam Kalaiyarasan)