புதிய அணியை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகல்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய வேறொரு சிறந்த தலைமைக்குக் கீழ் புதிய கட்சியொன்று உருவாக்கப்பட்டு தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஊடகம்ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில சிவில் அமைப்புகளும் இணைந்து புதிய அரசியல் அணியை உருவாக்கும் என புளொட் அமைப்பின் தகவல்களும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புதிய அணியை உருவாக்குவதற்காக தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக கொழும்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்களிடமும் அபிப்பிராயங்கள் பெறப்பட்டுவருவதாகவும் அவ்வூடகம்செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், உருவாக்கப்படும் புதியஅரசியல் அணிக்கு வடமாகாண முதலமைச்சரே பொருத்தமானவர் எனவும், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அவரையே முதலமைச்சர்வேட்பாளராக நியமிப்பது தொடர்பிலும்ஆராயப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.
இதன்காரணமாக, எதிர்வரும்மாகாணசபைத் தேர்தலுக்குமுன்னர் வடமாகாணமுதலமைச்சர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவார் எனவும்கொழும்புத் தகவல்கள்தெரிவிப்பதாக அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

(Thesamnet)