புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மகுல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. பதவியேற்புக்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகியிருந்தன. இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள 26 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அத்துடன், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனமும் வழங்கப்பட்டது.