‘புதிய அரசமைப்புக்கு சவாலான ஆதரவு’ – ஜே.வி.பி

“சவாலுக்கு மத்தியிலும் புதிய அரசியலமைப்புக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கும்” என, ஜே.வி.பியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டில்வின் சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “பௌத்த மதத்துக்குரிய இடத்தை மாற்றப் போவதில்லை என, அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. அதேபோல, ஏனைய மதங்களுக்குரிய இடங்களிலும் மாற்றங்கள் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஒருமித்த அல்லது ஐக்கிய என்ற வார்த்தைப் பிரயோகங்களில், இப்போது பலர் பல்வேறு விதமான கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில், முதன் முறையாக அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு, மக்களின் அபிப்பிராயத்தைப் பெற்று, பொது ஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்படவுள்ளதாக நாம் எண்ணுகிறோம் அவர் மேலும் தெரிவித்தார்.