புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது – கமல்ஹாசன்

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக ஆளும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அதிக வித்தியாசத்துடன் முன்னிலை வகிக்கிறது. மிசோரமில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. ராஜஸ்தானில் ஆளும் பாஜகவை தோற்கடித்து அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை விட காங்கிரஸ் ஒரு சில இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தவறவிடாதீர்
இனி தயக்கம் வேண்டாம்; கூட்டணிக்குத் தலைமை ஏற்க ராகுல் காந்தி தகுதியானவர்தான்: திருமாவளவன்

இந்நிலையில், இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது” என, பதிவிட்டுள்ளார்.