‘புதிய கூட்டணி சரியான பாதையில் பயணிக்கும்’

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வடக்கு – கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்குமெனத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், தமக்கான முழு ஆதரவை மக்கள் எமக்கு தர வேண்டும் எனவும் கோரினார்.