புலம்பெயர்ந்த புலிகளே ஜாக்கிரதை

 

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தக்குழுவினர் இரண்டு பிரிவாக விசாரணைகள தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச பொலிஸாருடன் இணைந்து குறித்த குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மறவன் புலோ பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.