புலிகளின் ஜெயந்தன் அணியைத் தேடி வேட்டை

தமிழீழ விடுதலைப் புலிகளின், ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றது. அந்தப் படையணியிலிருந்து தப்பிச்சென்று, தென்னிந்தியாவில் தலைமறைவாகி வாழ்ந்தவர்களில் சிலர் நாட்டுக்குள் மீண்டும் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்தே, இந்தத் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. ஜெயந்தன் படையணியைச் சேர்ந்தவர்களில் சிலர், மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலேயே, நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தத்தரப்பு தெரிவித்துள்ளது. தங்களுடைய பொலிஸ் பிரிவில், சந்தேகத்துக்கு இடமானமுறையில் நடமாடுபவர்கள் மற்றும் புதிய நபர்கள் தென்பட்டால், அவ்வாறானவர்கள் தொடர்பில், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும், பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.