ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல உதவினார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதான 48 வயதான Hamid Reza Jafary என்ற நபர் தாய்லாந்துக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சில ஆயிரம் டொலர்களுக்காக போலியான கடவுச்சீட்டுக்களைத் தயாரித்து தீவிரவாதிகள், அகதிகள் போன்றோருக்கு வழங்கியுள்ளதாக ஏபி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பாங்கொக் என்ற இடத்தில் அமைதியான வீடொன்றிலிருந்து இந்த வேலைகளைச் செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் நடவடிக்கைகளை கடந்த பல வருடங்களாக அவதானித்து வந்த தாய்லாந்துக் காவல்துறையினர் கடந்த கிழமை கைது செய்துள்ளனர்.