பெறுபேறுகள் தாமதத்துக்கு இதுதான் காரணமாம்

இன்று மாலை 4 மணிக்கு நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் முதலாவது பெறுபேற்றை இரவு 8 மணிக்கு முன்னதாக வெளியிடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. எனினும், இரவு 11:20 ஆகியும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு பெறுபேறும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வாக்குகளை மீண்டும் எண்ணுவதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சில, பிரதேச சபைகள், நகர ​சபைகள் மற்றும் மாநகர சபைகள் ஆகியவற்றுக்கான வாக்குகளை, மீளவும் எண்ணுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, மீளவும் எண்ணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.