பொது வேட்பாளரை களமிறக்க முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை சாராத வேட்பாளர் ஒருவரையே களமிறக்க முயற்சிகள் இடம்பெறுவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.