போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் பேரணி

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். நாச்சிக்குடா சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, முழங்காவில் மகா வித்தியாலயம் வரை சென்று சென்றடைந்த்து. பின்னர், பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.