‘போராட்டத்தில் கலந்துகொள்ளவும்’

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைவரும் கலந்துகொள்ளுமாறு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநாச்சி – பரவிப்பாஞசான் பகுதியில் இன்று (29) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நாளை சர்வதேச காணாமல் போனோர் தினமாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. அனைத்து பொதுமக்கள், அமைப்புகள், அரசியல்வாதிகளையும் குறித்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். இதேவேளை, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த எமது புலம்பெயர் உறவுகளும், எமக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையில், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தனர்.