மகாபொல இல்லையா.. பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மகாபொல புலமை பரிசில் இவ்வருடம் தமக்கு கிடைக்கவில்லையென கூறி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். தமக்கு இந்த வருடம் மகாபொல புலமைபரிசில் கிடைக்காது என பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம், தெரிவித்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மகாபொல புலமைபரிசிலாக 5,000 மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் இடம்பெற்றதையடுத்து, மாணவர்கள் கலைந்துசென்றனர்.