மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரியின் தோட்டத்தில்

மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில், சிறிலங்கா காவல்துறையினர் நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தி வருகின்றனர். மெதமுலானவில் உள்ள மேஜர் நெவில் வன்னியாராச்சியின் மூன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்திலேயே இந்த தேடுதல் நடத்தப்படுகிறது. மண்அகழும் இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தப்படுகிறது. பணம், நகைகள், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடத்தப்படுகிறது. மண் அகழப்படும் பகுதிக்கு எவரும் அனுமதிக்கப்படவில்லை.