மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

யாழ்ப்பாணம் வை. எம். சி. ஏ மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் தோழர் தி.ஸ்ரீதரன் (சுகு) மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப் பெருமாள் மற்றும் கட்சியின் செயலாளர் தோழர் சிவராசா மோகன் ஆகியோர் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்தனர். ஆறு இடங்களில் மட்டும் வடக்கு கிழக்கில் போட்டியிடும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றயவர்களைப் போலல்லாது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளிட்டு தமது முழுமையான செயற்பாட்டுத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளர். ஊழலற்ற வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி செயற்பாடு என்பது இவர்களின் தேர்தல் கோஷமாக இருக்கின்றது.