மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த கூட்டமும்

உரிமை போராட்டங்களில் உழைப்போரின் பங்களிப்பை உயர்த்தும் இலக்கோடு 2017ஆம் ஆண்டுக்கான மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாடும் வருடாந்த பொதுக் கூட்டமும் எதிர்வரும் 2017.04.02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு காவத்தை நகர கூட்டுறவு சங்க பண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் அச் சங்கத்தின் வருடாந்த அறிக்கையை சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாவும், வருடாந்த கணக்கறிக்கையை பொருளாளர் என்.தியாகராஜுவும், முன்னேற்ற அறிக்கையை உப தலைவர் எம். புண்ணியசீலனும் வழங்கவுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்களினதும் அமைப்புகளினதும் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் மக்கள் பாடல்களும் இசைக்கப்படவுள்ளன. தொடர்புகளுக்கு – 045-7201022, 071-4302909, 0715651319