மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்

புனித மக்காவுக்கு அருகிலுள்ள மினா நகரில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 717ற்கும் அதிகமான ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர். 805ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சவூதி சிவில் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. புனித மக்காவிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மினா நகரிலேயே இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கையர் எவரும் பாதிக்க ப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லையென சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹஜ்ஜுப் பெருநாளான நேற்றைய தினம் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான (2மில்லியன்) ஹஜ் யாத்திரி கர்கள் புனித கடமையை நிறைவேற்று வதற்காக மக்காவில் கூடியுள்ளனர். இதில் ஸைத்தானுக்கு கல்லெறிதலின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியே 717பேர் உயிரிழந்துள்ளனர். சவூதியின் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக சவூதி பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் சிக்குண்டு 717ற்கும் அதிகமான யாத்திரிகர்கள் உயிரிழந்திருப்பதுடன் 805ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களையும் காயமடைந்த வர்களையும் மீட்பதற்காக 4000 அதிகாரிகளும் 220 அம்பியூலன்ஸ் வண்டிகளும் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நான்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர் களுக்கு உடனடியான சிகிச்சைகளை வழங்குவதற்கு வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சவூதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்று சில நிமிட நேரங்களில் பொலிஸாரும், வைத்திய உதவியாளர்களும் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு ள்ளனர்.புனித மக்காவில் இந்த வருடத்தில் இடம் பெற்ற இரண்டாவது அசம்பாவித சம் பவமாக இது அமைந்துள்ளது. கடந்த 12ஆம் திகதி மக்கா பெரிய பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த இராட்சத கிரேன் (பாரம்தூக்கி) வீழ்ந்ததில் 107 பேர் உயிரிழந்திருந்தனர். 238 பேர் இதில் காயமடைந்திருந்தனர். மோசமான காலநிலை காரணமாக இந்தக் கிரேன் வீழ்ந்திருந்தது. இச் சம்பவம் இடம்பெற்று 13 நாட்களில் மற்றுமொரு அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு உலகெங்குமிருந்து இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் மக்கா பெரிய பள்ளிவாச லுக்குச் செல்வது விசேடமானது. சன நெரிசல் காரணமாக இதுபோன்ற உயி ரிழப்பு சம்பவங்கள் கடந்த காலங்களிலும் அங்கு இடம்பெற்றுள்ளன.

1990, 1994, 1997, 2006 ஆகிய வருடங் களிலும் இவ்வாறான உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 90ஆம் ஆண்டு 1426 பேர் உயிரிழந்திருந்ததுடன், 94 ஆம் ஆண்டு 270 பேரும், 97ஆம் ஆண்டு 343 பேரும், 2006ஆம் ஆண்டு 364 பேரும் உயிரிழந்திருந்தனர்.

ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற இலங்கையர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொட ர்பில் உடனடியாக எதுவித தகவல்களும் கிடைக்கவில்லையென சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மினா நகரில் உயிரிழந்த ஹஜ் யாத்திரி கர்களின் குடும்பங்களுக்கு உலகத் தலை வர்கள் பலர் தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தமது நாட்டவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விசேட ஏற்பாடுகளைச் செய் துள்ளன.