மட்டக்களப்பில் தமிழ் யுவதிகள் முஸ்லீமா..? நடப்பது என்ன…?

மட்டக்களப்பில் புனித இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக்காரணம் வறுமையே எனத்தெரியவருகின்றது. வறுமையின் நிமித்தம் காரணமாக கடைகளில் வேலை செய்யும் யுவதிகள் முஸ்லிம் இளைஞர்களை காதலிப்பதுடன் அவர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயம் புனித இஸ்லாத்தை தழுவவேண்டியேற்படுவதாக அண்மையில் ஏறார் கடையொன்றில் வேலைசெய்துஇஸ்லாத்துக்கு மாறிய பன்குடாவெளியைச்சேர்ந்த 22 வயது யுவதியொருவர் தெரிவித்தார். அத்துடன் நாம் வறுமையிண் வாடுகின்றோம் எமது ஆலயங்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன இச் சொத்தினை எம்மைப்போன்ற ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாமே? பள்ளிவாசல்கள் செய்யும் வேலையினை ஏன் எமது ஆலயங்கள் செய்யக்கூடாது என கேள்வி எழுப்புகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வகையான இந்து அமைப்புக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை ஏன் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் தாங்கள் தங்கள் குடும்பம் அறிக்கைகள் என்று ; இருக்காமல் மாதத்தில் ஒரு கிராமம் என்ற ரீதியில் மக்களின் வீடுகளுக்கு சென்று மக்களின் குறைநிறைகளை கேட்றியுங்கள் வாக்குகேட்டு வீடுவீடாக சென்ற உங்களுக்கு ஏன் மக்களின் குறைகளை கேட்க அவர்களின் வீட்டுக்கு செல்ல முடியாது. தாங்கள் எடுக்கின் மாதாந்த வேதனம் அந்த மக்கள் தங்களுக்கு இட்ட ….. என்பதை யாரும் மறக்கக்கூடாது.எடுக்கின்ற ……. ஆவது நன்றி சொல்ல அந்தமக்களின் வீட்டுவாசலுக்கு தயவு செய்து செல்லுங்கள். நமது இளம் யுவதிகள் ஒரு நாளைக்கு எத்தனைபேர் வறுமை காரணமாக மட்டக்களப்பில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள் என்ற தகவலையாவது மட்டக்களப்பு அரசியல் வாதிகளே தயவு செய்து அறிந்து வையுங்கள்.