மட்டக்களப்பு தேரர் ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த அங்குள்ள பிக்கு, இன்று சனிக்கிழமை (03) பிற்பகல் முயற்சி மேற்கொண்டதால் மட்டக்களப்பு நகரில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது

மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அவரது பயணம் மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையிலேயே மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்துக்கு முயற்சித்த வேளையில் பொலிஸார் முழுமூச்சாக குறித்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மங்களராம விஹாரையைச் சூழவிருந்த கடைகள் பூட்டப்பட்டன. போக்குவரத்து சேவையும் சற்று நேரம் பாதிக்கப்பட்டது. பயணிகள் பதற்றமடைந்தனர்.
– See more at: http://www.tamilmirror.lk/187404#sthash.F26GrktO.dpuf